உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபா மந்திர் கோயிலில் கும்பாபிஷேகம்

ஷீரடி சாய்பாபா மந்திர் கோயிலில் கும்பாபிஷேகம்

விருதுநகர் : விருதுநகர் அருகே மீசலுார் விலக்கு ஷீரடி சாய்பாபா மந்திர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி டிச.7ல் 108 மந்திரங்களுடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நடிகர் சின்னி ஜெயந்த் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். டிச.8ல் 3வது கால யாகசால பூஜை, மஹா லெட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம் நடந்தது. நேற்று 4வது கால யாகசாலை பூஜை உடன் காலை 10:00 மணிக்கு கலசத்திற்கு புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் அர்ச்சகர் அனந்த சயன பட்டர் பூஜைகளை செய்தார். ஏற்பாடுகளை ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மந்திர் நிர்வாகிகள், சேவகர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !