சந்தனமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :1470 days ago
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள தாமரைமொழி சந்தனமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தது. சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. கோபுர கலசம், சந்தன மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அலங்காரத்தில் சந்தன மாரியம்மன் அருள்பாலித்தார். இரவு சுற்று வட்டார பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.