மணியகாரன்பட்டியில் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1402 days ago
எரியோடு: எரியோடு பேரூராட்சி மணியகாரன்பட்டியில் மகாகணபதி, காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன், முருகன், கோட்டை முனியப்பன், தலைவாசல் முனியப்பன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த நவ. 8 துவங்கி நான்கு கால பூஜைகள் நடந்தன. நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது. வரதராஜ பெருமாள் கோயில் அர்ச்சகர் சவுந்தரராஜன் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பரமசிவம், பழனிச்சாமி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கவிதா, சுப்பையன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சவடமுத்து பங்கேற்றனர்.