உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக பந்தக்கால் முகூர்த்தம்

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக பந்தக்கால் முகூர்த்தம்

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் முன்னிலையில் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுடன், வரும் பிப்ரவரி 6ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

இதனை முன்னிட்டு, கோவில் யாகசாலை மற்றும் கிழக்கு கோபுர வாசலில் பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடந்தது. தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் முன்னிலையில் காலை 6:00 மணியளவில், சிவாச்சாரியார்கள் இணைந்து வேதமந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்களுடன் பந்தக்கால் நடப்பட்டு, தீபாராதனை செய்யப்பட்டது. முன்னதாக, ஆழத்து விநாயகர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. கும்பாபிஷேக கமிட்டி தலைவர் ஜெயின் ஜூவல்லரி அகர் சந்த், கோவில் எழுத்தர் பார்த்தசாரதி, மூத்த வழக்கறிஞர் பாலச்சந்திரன், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ராஜேந்திரன், கமிட்டி நிர்வாகிகள் சபாநாதன்,
விஸ்வநாதன், ராஜசேகர், கணேஷ்குமார் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !