உயிரிழந்த ராணுவ வீரர்களுக்காக ராமேஸ்வரத்தில் அங்கபிரதட்சணம்
ADDED :1404 days ago
ராமேஸ்வரம்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகள் ஆன்மா சாந்தியடைய வேண்டி ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி அங்கபிரதட்சணம் செய்தார். சென்னையைச் சேர்ந்த அனந்தபத்மநாபன் 63, சபரிமலை ஐயப்பன் பக்தர். இவரது மகன் விமான படையில் பணிபுரிகிறார். குன்னுார் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 ராணுவ அதிகாரிகளின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நான்கு ரதவீதியில் அனந்தபத்மநாபன் அங்கபிரதட்சணம் செய்து தரிசனம் செய்தார்.