உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையம் மாரியம்மன் வீதி உலா

ராஜபாளையம் மாரியம்மன் வீதி உலா

ராஜபாளையம்: ராஜபாளையம் திருவனந்தபுரம் தெரு ராஜுக்கள் மகாசபை சார்பில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் திருவீதி உலா நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிறப்பு நிகழ்ச்சியாக தென்காசி ரோடு, திருவனந்தபுரம் தெரு, அம்பலபுளி பஜார், சக்கராஜாகோட்டை, ஜவகர் மைதானம் வழியாக அம்மன் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மகா சபை தலைவர் ஜெகநாத ராஜா தலைமை வகித்தார். ஏற்பாடுகளை துணை தலைவர் ராதாகிருஷ்ண ராஜா, பொருளாளர் முருகேசன் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !