உச்சிப்பொழுதில் தரிசனம்
ADDED :1645 days ago
சிதம்பரத்தை நடராஜர் கோயில் என்று குறிப்பிட்டாலும் இங்குள்ள மூலவர் லிங்க விடிவில் ‘ஆதிமூலநாதர்’ என்னும் பெயருடன் இருக்கிறார். கைலாய நாதரான சிவபெருமானின் நடனத்தை பூலோக மக்களும் தரிசிக்க விரும்பிய பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள், தில்லை வனமான இங்கு ஆதிமூலநாதரை நோக்கி தவமிருந்தனர். வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் தைப்பூச நாளில் உச்சிப்பொழுதில் ‘திரிசகஸ்ர முனிவர்கள்’ என்னும் 3000 அந்தணர்களுடன் எழுந்தருளி நடன தரிசனம் அளித்தார்.