ஐயப்ப சுவாமிக்கு மண்டலாபிஷேக பூர்த்தி விழா
ADDED :1458 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி துருகம் சாலை பழைய மாரியம்மன் கோவிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. அதனையொட்டி, நேற்று அதிகாலை மகா கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் புஷ்பாஞ்சலி செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல், கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில், கமலா நேரு தெரு காமாட்சி அம்மன் கோவில், மந்தைவெளி முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள ஐயப்ப சுவாமி, காந்திரோடு ஐயப்பன் கோவிலிலும் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.