வாழ்வில் வளங்கள் யாவும் தரும் சுகப்பிரம்ம ஜெயந்தி இன்று!
ADDED :4880 days ago
வேதவியாசரின் புதல்வர் சுகர். ஒரு முறை ஜனன-மரண ரகசியங்களை உமையன்னைக்கு ஈசன் சொல்லிக் கொண்டிருந்த போது உமை கண்கள் அசர, அருகே மரத்தில் அமர்ந்திருந்த கிளிக்குஞ்சு ஈசனின் உபதேசத்தை ம் கொட்டிக் கேட்டது. ம் கொட்டியது கிளி என்பதை அறிந்த ஈசன், அதைப் பிடிக்க முற்பட, அது வியாசரின் மனைவியின் கர்ப்பத்தில் அடைக்கலமானது. ஈசன் கிளியே வெளியே வா என அழைக்க கிளி முகத்தோடு சுகர் தோன்றினார். சிவ ரகசியத்தை எவரிடமும் கூறாமல் பிரம்மமாக இரு. உன் ஜன்ம தினத்தன்று என்னையும் உன்னையும் வணங்குபவர்கள் வாழ்வு சிறக்கும் என ஆசி வழங்கினார் ஈசன். சுகப்பிரம்மரை வணங்கி வாழ்வில் வளங்கள் யாவும் பெறுவோம்.