காலபைரவர் கோயிலில் 1,008 கிலோ வத்தல் மிளகாயால் மகா யாகம்
ADDED :1390 days ago
மார்த்தாண்டம்: குழித்துறை காலபைரவர் கோயிலில் 1,008 கிலோ வத்தல் மிளகாயால் மகா யாகம் நடந்தது. குழித்துறை இடத்தெருவில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் காலபைரவர் கோயில் உள்ளது. இங்கு மூன்றாவது முறையாக 1008 கிலோ வத்தல் மிளகாயால் மகாயாகம் நடந்தது. காலை 5 மணிக்குஅஷ்ட திரவிய மஹா கணபதி ஹோமம், கலசாபிஷேகம், யாக சாலை பிரவேசம், பரிவார பூஜை , மதியம் 12.30க்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு 1,008 கிலோ வத்தல் மிளகாய் சமர்ப்பணம், தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை பைரவன் காவு சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.