உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா

மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா

அனுப்பர்பாளையம்: திருப்பூர், அவிநாசி ரோடு, அம்மா பாளையத்தில் அமைந்த ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காமாட்சி அம்மன், ஸ்ரீமாகாளியம்மன், ஸ்ரீ கருப்பராயர், பொங்கல் திருவிழா கடந்த 21ஆம் தேதி பூசாட்டுடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி, கடந்த 22 நம் தேதி முதல், 26 ந் தேதி முதல் அலங்கார பூஜை நடைபெற்றது. 26 ம் தேதி பொட்டு சாமிக்கு பொங்கல் இடுதல், 27 ந் தேதி விநாயகருக்கு பொங்கல் வைத்தல் மற்றும் படைக்கலம் அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 28 ந் தேதி கும்பம் எடுத்தல் நிகழ்ச்சியும், இன்று 29 ந் தேதி காலை 7 மணிக்கு மாவிளக்கு மற்றும் பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்தனர். நாளை மதியம் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !