உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யப்பன் கோவிலில் அகண்ட நாம பஜனை

அய்யப்பன் கோவிலில் அகண்ட நாம பஜனை

 பொள்ளாச்சி: குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா அய்யப்பன் கோவிலில், மார்கழி உற்சவத்தை முன்னிட்டு, கடந்த, 24ம் தேதி காலை, 5:00 மணி முதல், 26ம் தேதி காலை, 5:00 மணி வரை தொடர் அகண்ட நாம பஜனை நடத்தப்பட்டது.கோவை சித்தாபுதுார் அய்யப்பன் பஜனை குழுவினர், ஸ்ரீ அய்யப்பா இளைஞர் சேவா அணி, சவுடேஸ்வரியம்மன் இளைஞர் நல சங்கம், பழனிக்கவுண்டன்புதுார் விஷ்ணு பஜனைக்குழுவினர், ஸ்ரீகந்த ஸ்ருதி பஜனை குழுவினர் உள்ளிட்டோர், 24 மணி நேரம் தொடர்ந்து பக்தி இசை பாடினர்.அகண்ட நாம பஜனையை தொடர்ந்து, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, 26ம் தேதி காலை நடை திறப்பு, நிர்மாலய தரிசனம், மகாகணபதி ேஹாமம், மகா அஷ்டாபிேஷகம்; மாலையில் தர்மசாஸ்தாவுக்கு திருவாபரண பூஜை, அன்னதானம், படிபூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !