மானாமதுரையில் ஐயப்ப பக்தர்கள் கன்னி பூஜை விழா
ADDED :1454 days ago
மானாமதுரை: மானாமதுரையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் கன்னி பூஜை மற்றும் அன்னதான விழா நடைபெற்றது.
மானாமதுரை பஞ்சமுக ஆஞ்சநேய ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் 200க்கும் மேற்பட்டோர் கார்த்திகை மாதம் முதல் தேதி மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர் இந்நிலையில் புதிதாக மாலை போட்ட கன்னிசாமிகளுக்காக நேற்று கன்னி பூஜை நடைபெற்றது. இதற்காக ஐயப்பன் மற்றும் இதய சுவாமிகளின் படங்களுக்கு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன இதனை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் ஒன்றாக சேர்ந்து பஜனை நடத்தினர் பின்னர் அன்னதானம் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை ஐயப்ப குருசாமி பாஸ்கரன் செய்திருந்தார்.