வல்லப கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1634 days ago
புதுச்சேரி : முத்திரையர்பாளையத்தில், வல்லப கணபதி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.முத்திரையர்பாளையம், டாக்டர் தனபால் நகரில் உள்ள வல்லப கணபதி கோவிலில், மார்கழி மாதத்தை முன்னிட்டு சுவாமிக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. வல்லப கணபதி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.