அனுமன் – பெயர் விளக்கம்
ADDED :1396 days ago
‘ஹனு’ என்றால் ‘தாடை’ ‘மன்’ என்றால் ‘பெரிதானது’. ஆகவே ‘ஹனுமன்’ என்றால் ‘பெரிய தாடையை உடையவன்’ என்பது பொருள். அதையே ‘அனுமன்’ என குறிப்பிடுகிறோம். அஞ்சனையின் மகன் என்பதால் அவர் ‘ஆஞ்சநேயர்’. வாயு பகவானின் மகன் என்பதால் ‘வாயு புத்திரன்’. சூரிய பகவானை குருவாகக் கொண்டு ஒன்பது விதமான இலக்கணங்களை கற்றுத் தேர்ந்ததால், ‘நவ வியாகரண பண்டிதர்’ எனப்படுகிறார்.