ராமனுக்கு இவரே பக்கபலம்
ADDED :1707 days ago
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் காக்க கோதண்டம் என்னும் வில்லுடன் ஓடி வருபவர் அவர். இப்படிப்பட்ட பலசாலியான அவரே சீதையைப் பிரிந்த நேரத்தில் செய்வதறியாமல் கலங்கினார். அப்போது ராமருக்கு மனபலம் தந்த பெருமை அனுமனையே சேரும். ராவணனால் கடத்தப்பட்ட சீதை அசோகவனத்தில் இருப்பதை அறிந்து அவளை மீட்க உதவினார். பலம் மிக்க ராமனுக்கே பக்கபலமாக இருக்கும் அனுமனைச் சரணடைவோம்.