உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டை நகரத்தார் தைப்பூசம் காவடிகள் இன்று புறப்படுகிறது

தேவகோட்டை நகரத்தார் தைப்பூசம் காவடிகள் இன்று புறப்படுகிறது

தேவகோட்டை: தேவகோட்டையில் இருந்து தைப்பூசம் விழாவை முன்னிட்டு வழக்கமாக செல்லும் நகரத்தார் காவடிகள் அரசின் கட்டுபாடுகள் காரணமாக புறப்படுவதில் சிக்கல் நிலவியது. நேற்று முன்தினம் நீண்ட பேச்சாவார்த்தை நடந்தது. இருப்பினும் மாலை இருவர் கண்டிப்பாக செல்வதாக காவடி கட்டினர். அதனைத் தொடர்ந்து நேற்று 15 பேர் காவடிகளை கட்டி தயாராகினர். காவடிகள் கட்டப்பட்டதை நேற்று அரோகரா போடப்பட்டு , நேற்று மாலை நகர்வலம் வந்தனர். காவடிகள் இரவு 8 மணியளவில் சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலை அடைந்தது. காவடிகள் வைக்கப்பட்டு இன்று அதிகாலை பூஜைகளை தொடர்ந்து 5:30 மணிக்கு காவடிகள் புறப்படுகிறது. வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் தேவகோட்டையில் தங்கி இன்று புறப்படுகின்றனர்.          


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !