மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
1337 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
1337 days ago
பல்லடம்: பல்லடம் அருகே, 50 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த நாராணபுரம் கிராமத்தில் உள்ளது அங்காளம்மன் கோவில். இக்கோவிலுக்கு சொந்தமான, 8.95 ஏக்கர் நிலம், மகாலட்சுமி நகர் அருகே உள்ளது. இந்த இடத்தை ராமலிங்கம், செந்தில், சேது ராமலிங்கம், ஜெயபாரதி, விஜயபாரதி, மற்றும் சந்திரா ஆகியோரின் ஆக்கிரமிப்பில் இருந்தது. இது தொடர்பாக, திருப்பூர் மாவட்ட இணை ஆணையர் கோர்ட்டில், வழக்கு நடந்து வந்தது. வழக்கு விசாரணை நிறைவுக்கு வந்த சூழலில், ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டது. இணை ஆணையர் உத்தரவின்பேரில், ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்மானிக்கப்பட்டது. ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வராஜ், தனி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உட்பட, வருவாய் துறை, மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில், ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டன. இன்றைய சூழலில், நீக்கப்பட்ட நிலங்களின் மதிப்பு, 50 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1337 days ago
1337 days ago