பிரதமர் மோடி நீண்ட ஆயுள் பெற சிறப்பு யாகம்
ADDED :1444 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க., சார்பில், பிரதமர் மோடி நீண்ட ஆயுள் பெற சிறப்பு யாகம் நடந்தது.
பஞ்சாப் சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாக வாழ பா.ஜ.க., சார்பில், பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகள், யாகம் ஆகியன நடத்தப்பட்டு வருகின்றன. பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரங்கநாதர் கோவிலில் கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க., சார்பில், சிறப்பு யாகம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா தலைமை வகித்தார். சவுந்தரராஜ் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட பார்வையாளர் முருகானந்தம், பொதுச் செயலாளர்கள் செல்வராஜ், சத்தியமூர்த்தி, சுபாஷ் சந்திரபோஸ், மாவட்ட பொருளாளர் பிரபு, கவுன்சிலர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.