சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் வழங்கிய ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி
ADDED :1372 days ago
ஸ்ரீரங்கம்: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி மங்கலப் பொருட்களை சீர் வழங்கும் நிகழ்ச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்றது. அதை முன்னிட்டு நேற்று(18 ம்தேதி) மாலை 05.00 மணியளவில் மங்கலப் பொருட்களை ஸ்ரீரெங்க விலாச மண்டபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்ட பின்பு கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து , உதவி ஆணையர் திரு கு.கந்தசாமி , மேலாளர் திருமதி கி.உமா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் சமயபுரம் சென்று மாரியம்மன் திருக்கோயில் இணை ஆணையர் திரு சி. செல்வராஜ் அவர்களிடம் வழங்கினர்.