வேம்பார்பட்டியில் சமூக நல்லிணக்கத்துடன்- புதிய ஆலய அர்ச்சிப்பு விழா நடந்தது
கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட புனித லூர்து அன்னை ஆலய திறப்பு விழா நடந்தது. ஆலயத்தை திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமை ஏற்று திறந்து வைத்தார். தேவாலய பங்குத்தந்தை அந்தோணி சேகர் முன்னிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. மேலும் மும் மதத்தினரும் கலந்து கொண்டு ஆலய அர்ச்சிப்பு விழா சமூக நல்லிணக்கத்துடன் நடந்தது. விழாவில் வேம்பார்பட்டி ஜமாத் தலைவர் கண்ணு முகமது மற்றும் ஊர் நாட்டாமை மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எம்.ஏல்.ஏ மற்றும் திமுக மாவட்ட கவுன்சிலர் க.விஜயன் , நத்தம் ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.வி.என். கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.