உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்யானைக்கு கரும்பு

கல்யானைக்கு கரும்பு


மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள சித்தர் சன்னதி புகழ் பெற்றது. இவரது பெயர் சுந்தரானந்தர். சதுரகிரி மலையில் மகாலிங்கத்தை பிரதிஷ்டை செய்த அகத்தியர், அதை சுந்தரானந்தரின் மேற்பார்வையில் விட்டுச் சென்றார். அதனால் அவருக்கு ‘சுந்தர மகாலிங்கசுவாமி’ என்ற பெயர் உண்டானது.
 புதன் தலமாக மதுரை விளங்குவதால, சி்த்தரை புதன் கிழமையில் வழிபட கல்வியில் மேம்பாடு உண்டாகும். நினைத்ததை நிறைவேற பக்தர்கள் சித்தருக்கு பூப்பந்தல் இட்டு பக்தர்கள் வழிபடுகின்றனர். இக்கோயிலில் சிவபெருமானே சித்தராக எழுந்தருளி கல்யானைக்கு கரும்பு கொடுத்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. இதனால்  ‘எல்லாம் வல்ல சித்தர்’ என இவர் அழைக்கப்படுகிறார். சித்தர் சன்னதிக்கு அருகில் கல்யானையும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !