உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படவேடு ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேக விழா

படவேடு ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேக விழா

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த, படவேடு ரேணுகாம்பாள்  கோவில் மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல் அடுத்த படவேடு கிராமத்தில், அறநிலையத்துறைக்கு சொந்தமான ரேணுகாம்பாள் அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த, 2-ல், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை, ஆறாம் யாக சாலை பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் முழங்க, கோவில் கருவறை மேல் உள்ள கலசம், கோபுர கலசம் உள்ளிட்டவற்றின் மீது, 8:15 மணியளவில், யாக சாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீரை  ஊற்றி கும்பாபி ேஷகம் நடந்தது. கொரோனா ஊரடங்கால், 3,000 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதனால், குறைந்த அளவே பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !