பாம்பன் சுவாமி கோயில் கார்த்திகை சிறப்பு பூஜை
ADDED :1373 days ago
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே தென்னம்பிள்ளை வலசையில் மயூரநாதப் பெருமான், பாம்பன் சுவாமி கோயில் உள்ளது. கார்த்திகையை முன்னிட்டு நேற்று காலை 10 மணி அளவில் மூலவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. பெண்கள் நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.