உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயில் விழா நிறைவு

வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயில் விழா நிறைவு

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயில் விழா கடந்த ஜூன் 29 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளல், அதிகாலையில் கணபதி ஹோமம், யாக பூஜைகள், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, திருமஞ்சனம் நடந்தது. 5 ம் நாள் திருக்கல்யாணம் நடந்தது. இதைத் தொடர்ந்து மாலையில் திவ்யநாம பஜனை வழிபாடு, வீதியுலா நாமாவளி பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை சேவா சமிதி டிரஸ்ட் தலைவர் ராஜகோபாலன், செயலாளர் நாராயணன், பொருளாளர் அழகர், கோயில் நிர்வாக அதிகாரி சரவணன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !