சீரடி சாய் பைரவர் தியான பீடம் ஆண்டு விழா
ADDED :1371 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவு ஜோதிபுரம் செல்வபுரம் வடக்கு பகுதியில் உள்ள சீரடி சாய் பைரவர் தியான பீடத்தின், 7ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, சீரடி சாய்பாபா பைரவர் தியான பீட நிர்வாகி ஷிலா செந்தில்குமார் தலைமை வகித்தார். விழாவையொட்டி, பஞ்சமுகி ஆஞ்சநேயர் பிரதிஷ்டை விழா நடந்தது. மதியம் பகல் ஆரத்தியும், மதியம், 1:00 மணிக்கு அன்னதானம், பஜன், மாலை, 4:00 மணிக்கு, குதிரையில் பல்லக்கு ஊர்வலம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு ஆரத்தியும், இரவு, 8:00 மணிக்கு இரவு ஆரத்தியும் நடந்தது. விழாவில், சீரடி சாய் பைரவர் தியான பீடம் மேனேஜிங் டிரஸ்டி செந்தில்குமாருக்கு பிரம்ம ஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது.