உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மாசித் தெப்ப உற்சவம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மாசித் தெப்ப உற்சவம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மாசித் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்ப உற்சவம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. 9 நாட்கள் நடைபெறும் விழாவில் நம்பெருமாள் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். விழாவில் நேற்று ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 4.30 மணியளவில் வந்து சேர்ந்தார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளினார்.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !