ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில் வளர்பிறை ஏகாதசி பூஜை
ADDED :1367 days ago
பொள்ளாச்சி: ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், தை மாத வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை நடந்தது.புத்ர பாக்கியம் தரும் புத்ரதா ஏகாதசி என கூறப்படும் ஏகாதசியையொட்டி பெருமாளுக்கு, பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட, ஒன்பது வகையான அபிேஷகமும், ஒன்பது வகையான மலர்களால் அலங்கார பூஜையும் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.