சோமசுந்தரேஸ்வரர் கோயிலில் பிப்.16ல் தேரோட்டம்
ADDED :1442 days ago
காரைக்குடி: கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில் மாசிமகத் தேர்த்திருவிழா பிப்.16ல் நடைபெறுகிறது.கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் கோயில் மாசிமகத் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். கடந்த அக்டோபரில் இக்கோயிலின் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. இந்தாண்டு மாசிமகத் தேர்த் திருவிழா கடந்த பிப்.8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. நாளை காலை திருக்கல்யாண நிகழ்ச்சியும், பிப்.16 முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.