பழநி முருகன் கோயிலில் மாதப்பிறப்பு சிறப்பு பூஜை
ADDED :1677 days ago
பழநி: பழநி முருகன் மலைக்கோயிலில் மாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
பழநி முருகன் மலைக்கோயிலில் மாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடைபெற்றது. ஆனந்த விநாயகருக்கு கலச நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி பெருமாள் கோயிலில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் வருகை அதிகரித்து இருந்தது.