காரைக்கால் மண்டபத்தூரில் தீர்த்தவாரி: பக்தர்கள் தரிசனம்
காரைக்கால்: காரைக்கால் மண்டபத்தூரில் நடந்த தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் கோட்டுச்சேரி திருவேட்டக்குடி செளந்திரநாயகியம்பாள் உடனமர் ஸ்ரீ திருமேனியழகர் கோவிலில் மாசி மகோத்ஸ்வத்தை முன்னிட்டு கடந்த 14ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவக்கியது.16ம் தேதி வேடமூர்த்தி அம்பாளுடன் வெள்ளைசாத்தி புறப்பட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருதல். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான இன்று மண்டபத்தூர் மீனவ கிராமத்தில் மாசி மகத்தையொட்டி காலை 12மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் மண்டபத்தூர், வரிச்சிக்குடி, மேலகாசாகுடி, பூவம், திருவேட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 12 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளிய சுவாமிகள் மண்டபத்தூர் மீனவ கிராமத்தில் வங்கக்கடலில் தீர்த்தவாரி மற்றும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தீர்த்தவாரி முடிந்து மாலை மண்டபத்தூரிலிருந்து புறப்பட்டு சொந்த ஊர்களுக்கு சாமி வீதியுலா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா சுவாமி தரிசனம் செய்தார்.முன்னாள் எம்.எல்.ஏ., ஒமலிங்கம் தலைமையில் அனைத்து சாமிகளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமாக பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.