உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கையை விட புனிதத்தீர்த்தம்

கங்கையை விட புனிதத்தீர்த்தம்


தீர்த்த மகிமையால் கங்கையை விட உயர்ந்து விளங்கும் தலம் ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதேஸ்வரர் கோயில். தஞ்சாவூர் மாவட்டம் குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் சாலையில் உள்ளது. இங்கு கங்கையை விடப் புனிதமான குப்தகங்கை தீர்த்தமாக உள்ளது. அம்மன் மங்களநாயகி, எமதர்மர் ஆகியோருக்கு சந்நிதி இருக்கிறது. உயிர்களைப் பறிக்கும் பாவம் நீங்க, எமன் மாசிமகத்தன்று இங்கு வழிபட்டு இறைவனுக்கு வாகனமாகும் பேறு பெற்றார். மாசி திருவிழாவின் 2ம் நாள் வாஞ்சிநாதர் எமவாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி வழங்குவார். வாஞ்சிநாதரையும், எமனையும் வழிபட்டவர்க்கு மரணபயம் நீங்கும் என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !