அங்காளம்மன் கோவிலில், வரும், 2 ம்தேதி குண்டம் மற்றும் தேர் திருவிழா
சூலூர்: முத்துக்கவுண்டன் புதூர் அங்காளம்மன் கோவிலில், வரும், மார்ச் 2 ம்தேதி குண்டம் திருவிழா நடக்கிறது.
முத்துக்கவுண்டன் புதூரில் உள்ள அங்காளம்மன் கோவில் பழமையானது. முத்துக்கவுண்டன்புதூர், காளியா புரம், ராசிபாளையம், அருகம்பாளையம் கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில், மகா சிவராத்திரி மற்றும் குண்டம் திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். வரும், மார்ச் 1 ம்தேதி இரவு 9:00 மணிக்கு. அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடக்கிறது. தொடர்ந்து பள்ளைய பூஜை, குண்டத்துக்கு பூ போடும் வைபவம் நடக்கின்றன. 2 ம்தேதி காலை, 8:00 மணிக்கு குண்டம் இறங்குதல் துவங்குகிறது. மாலை, 4:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர். இதேபோல், சூலூர் கிழக்கு அங்காளம்மன் கோவில், இருகூர் அங்காளம்மன் கோவிலில் வரும், மார்ச் 2 ம்தேதி குண்டம் திருவிழா நடக்கிறது.