உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சப்தகிரி குழுமம் சார்பில் அன்னதானம் வழங்கல்

சப்தகிரி குழுமம் சார்பில் அன்னதானம் வழங்கல்

புதுச்சேரி: மாசிமக தீர்த்தவாரியை முன்னிட்டு, சப்தகிரி குழுமம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்வை கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.புதுச்சேரி சப்தகிரி குழுமம் சார்பில், நேற்று முன்தினம் மாசிமக தீர்த்தவாரியை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.திருவள்ளுவர் நகர் பாரதி வீதி சாய்பாபா திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கும் பணியை, கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். ராமலிங்கம் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சாய்சரவணன் குமார், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், வெங்கடேசன், அசோக் பாபு கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை சப்தகிரி குழும இயக்குனர் ரமேஷ் குமார், இணை இயக்குனர் விஜய் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !