பூச்சிக்காடு கோயிலில் 15ம் தேதி கொடை விழா துவக்கம்
ADDED :4803 days ago
திசையன்விளை : பூச்சிக்காடு கோயிலில் வரும் 15ம் தேதி கொடை விழா துவங்குகிறது. பூச்சிக்காடு விலக்கு பிரம்மசக்தி அம்மன் கோயில் 59வது ஆண்டு கொடை விழா வரும் 15ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது. முதல் நாள் கும்பாபிஷேகம், மேளம், வில்லிசை, நகைச்சுவை பட்டிமன்றம் ஆகியன நடக்கிறது. 16ம் தேதி அபிஷேக பூஜை, வில்லிசை, அலங்கார பூஜை, பால்குட ஊர்வலம், சிறப்பு அலங்கார பூஜை, திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி ஆகியன நடக்கிறது. 17ம் தேதி அபிஷேக பூஜை, உறுமி, வில்லிசை, அலங்கார பூஜை, மஞ்சள் நீராடல், அன்னதானம், அம்மன் சப்பர பவனி, மஞ்சள் பெட்டி ஊர்வலம், கரகம், சிறப்பு புஷ்ப அலங்கார பூஜை, வாண வேடிக்கை, 18ம் தேதி பொங்கல் பொறித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை முத்துக்குட்டி சாமி செய்து வருகிறார்.