நெல்லை கனக மகாலெட்சுமி கோயிலில் 15ம் தேதி வருஷாபிஷேகம்
ADDED :4803 days ago
திருநெல்வேலி : நெல்லை கனக மகாலெட்சுமி (தாயார்) மற்றும் உற்சவர் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் வரும் (15ம் தேதி) நடக்கிறது. நெல்லை ஜங்ஷன் கெட்வெல் சஞ்சீவி வரத ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் ஸ்ரீ கனக மகாலெட்சுமி (தாயார்) மற்றும் உற்சவர் மகாலெட்சுமி நூதன பிரதிஷ்டை விழா வரும் 15ம் தேதி நடக்கிறது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு அன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. திருக்கல்யாணத்தை தென்னாங்கூர் பாண்டுரெங்கன் கோயில் தலைமை அர்ச்சகர் பாலாஜி பட்டாச்சார் குழுவினர் நடத்திவைக்கின்றனர். ஏற்பாடுகளை கெட்வெல் ராஜாமணி பட்டாச்சார், சீனிவாச பட்டாச்சார் குழுவினர் செய்துள்ளனர்.