உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாபநாசம் அகஸ்தியர் கோயிலில் நாளை கார்த்திகை சிறப்பு வழிபாடு

பாபநாசம் அகஸ்தியர் கோயிலில் நாளை கார்த்திகை சிறப்பு வழிபாடு

திருநெல்வேலி : பாபநாசம் அகஸ்தியர் கோயிலில் நாளை (14ம் தேதி) கார்த்திகை சிறப்பு வழிபாடு நடக்கிறது. பழைய பாபநாசம் அகஸ்தியர் கோயிலில் மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை கமிட்டி சார்பில் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இந்த மாதம் நாளை (14ம் தேதி) கார்த்திகையை முன்னிட்டு அன்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி வீதியுலா, அன்னதானம் நடக்கிறது. வி.கே.புரம் ஜெயபால், அகஸ்தியர்பட்டி ஆண்டி, சென்னை வக்கீல் ராஜா ஆகியோர் அபிஷேக கட்டளையையும், பாபநாசம் பொதிகையடி ராமலிங்கம், வி.கே.புரம் வக்கீல் சிவசுந்தரமூர்த்தி ஆகியோர் அன்னதான கட்டளையையும் செய்கின்றனர். ஏற்பாடுகளை பாபநாசம் அகஸ்தியர் கோயில் கார்த்திகை கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !