கடையம் கோயிலில் கொடை விழா
ADDED :4804 days ago
ஆழ்வார்குறிச்சி : கடையம் தெப்பக்குளம் தளவாய் மாடசாமி கோயிலில் கொடை விழா கோலாகலமாக நடந்தது. கடையம் வில்வவனநாதர்-நித்யகல்யாணி அம்பாள் கோயில் அருகே வடக்கு பகுதியில் பாறைக்கு அருகில் தெப்பக்குளம் தளவாய் மாடசாமி கோயில் உள்ளது. இங்கு நடந்த கொடை திருவிழாவை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் கூடிய தீபாராதனையை சுந்தர்பட்டர் நடத்தினார். பின்னர் பக்தர்கள் சார்பில் படைப்பு தீபாராதனையும், வடை மாலை அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தலும் நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை தெப்பக்குளம் தளவாய் மாடசாமி பக்தர்கள் செய்திருந்தனர்.