சமயபுரம் கோவில் பாதயாத்திரை பக்தர்கள் பால் காவடி ஊர்வலம்
விருத்தாசலம் : சமயபுரம் கோவில் பாதயாத்திரை பக்தர்கள் விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் இருந்து, காவடி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக ரயில்வே குடியிருப்பு மாரியம்மன் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.விருத்தாசலம் ரயில்வே குடியிருப்பு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம்.
இதையொட்டி நேற்று காலை 11:00 மணிக்கு விருத்தாசலம் மணிமுக்தாற்றில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி, தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக ரயில்வே குடியிருப்பு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.பின், பகல் 1:00 மணிக்கு மாரியம்மன், விநாயர் சுவாமிகளுக்கு, அபி ேஷக, ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். நாளை 22ம் தேதி விருத்தாசலத்தில் இருந்து சமயபுரம் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டுச் செல்கின்றனர்.