உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளிங்கிரி கோவிலில் ஐ.ஜி., ஆய்வு

வெள்ளிங்கிரி கோவிலில் ஐ.ஜி., ஆய்வு

 ஆலாந்துறை: பூண்டி, வெள்ளியங்கிரி கோவிலில், மகா சிவராத்திரி தினத்தன்று, மலையேற ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து, மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் ஆய்வு செய்தார்.

தென் கைலாயம் எனப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், ஆண்டுதோறும் மகாசிவராத்திரி தினத்தன்று, ஏழாவது மலையில் உள்ள சுயம்பு வடிவிலான வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்தாண்டு, மகா சிவராத்திரி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், அடிவாரத்தில் உள்ள கோவில் பகுதியில், பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து வனத்துறையினர், போலீசார், கோவில் நிர்வாகத்தினர் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடத்தினர். இந்நிலையில், வெள்ளியங்கிரி கோவிலில், நேற்று மாலை, மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் நேரில் ஆய்வு செய்தார். பார்க்கிங் வசதி, குடிநீர் வசதி, வாகனங்கள் செல்லும் சாலை போன்றவைகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது, டி.ஐ.ஜி., முத்துச்சாமி, எஸ்‌.பி., செல்வநாகரத்தினம் ஆகியோர் உடனருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !