பரமக்குடியில் புதிய அற்புதக் குழந்தை இயேசு சர்ச் அர்ச்சிப்பு
பரமக்குடி: பரமக்குடி அருகே உலகநாதபுரம் பகுதியில் அற்புத குழந்தை இயேசு சர்ச் புதிய கோயில் புனிதப்படுத்தும் அர்சிப்பு மற்றும் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிவகங்கை மறை மாவட்ட மேனாள் ஆயர் சூசை மாணிக்கம் திறந்து வைத்தார். பங்கு பணியாளர் சிங்கராயர் வரவேற்றார். அப்போது புதிய சர்ச் வளாகத்தில் வரவேற்பு நடனம் நடந்தது. தொடர்ந்து அற்புதக் குழந்தை இயேசு சர்ச் திறப்பு மற்றும் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. பின்னர் சர்ச் வளாகம் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டு அர்ச்சிப்பு செய்யப்பட்டது. மேலும் திருப்பலிகள் நடத்தப்பட்டன. தூத்துக்குடி அருள்தந்தை தாமஸ் மறை உரை ஆற்றினார். சிவகங்கை மறைமாவட்ட பொருளாளர் சந்தியாகு கல்வெட்டை திறந்து வைத்தார். பேரவை செயலர் ஆசிரியர் ரிச்சர்டு சர்ச் வரலாறு வாசித்தார். இந்த விழாவில் பி.எஸ்.ஆர். சேம்பர் உரிமையாளர் பன்னீர்செல்வம், தைக்கா ஹோட்டல் மரிய சோசப், பார்க்கவகுல சங்க முன்னாள் தலைவர் தோமையர், திருவரங்கம் அலெக்சாண்டர் பிரபாகரன் ஞானப்பிரகாசம் அருள்பிரகாஷ் ஜேசுராஜ் சார்லஸ் தங்கதுரை ஜஸ்டின் திரவியம் அருள் ஜான் கென்னடி இயேசுதாஸ் ஆரோக்கியம் மரிய ஜேம்ஸ் பன்னீர்செல்வம் மற்றும் திருஇருதய அருள் சகோதரர்கள் பங்கு அருட்பணி பேரவை, அன்பியங்கள், பங்கு மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர், அன்னதானம் வழங்கப்பட்டது.