உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மைதானத்தில் மார்ச் 1-ம் தேதி மாலை மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவில் மகா சிவராத்திரி அன்று 100-க்கும் மேற்பட்ட ஆன்மீக கலைஞர்கள் இணைந்து மார்ச் 1ம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 2-ம் தேதி காலை 6 மணி வரை 12 மணி நேர ஆன்மீகம் தொடர்பான மங்கள இசை, சொற்பொழிவுகள், நாட்டிய நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பக்தி பாடல்கள், கிராமிய இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளன.

விழாவில்..

மார்ச் 1-ம் தேதி மாலை 6.00 மணி முதல் 6.30 வரை மங்கள இசை – மோகன்தாஸ் நாதஸ்வர குழுவினர்

மாலை 6.30 மணி முதல் 7.30 வரை துவக்க விழா – சிறப்பு அழைப்பாளர்களை கொண்டு துவக்கப்படும்

இரவு 7.30 மணி முதல் 8.30 வரை சிவ தரிசனம் – திருமுறை, வேத பாராயணம், கயிலை வாத்தியம்

இரவு 8.30 மணி முதல் 9.00 வரை ஜுகள் பந்தி நடனம் – தரானா அகாடமி ஆஃப் கதக்

இரவு 9.00 மணி முதல் 10.30 வரை பட்டிமன்றம் – நடுவர் கலைமாமணி சுகி சிவம் குழுவினர்.

இரவு 10.30 மணி முதல் 11.00 வரை தமிழ் பக்தி இசை – திருமதி சுசித்ரா, வித்யா, வினயா குழுவினர்.

இரவு 1.30 மணி முதல் 1.00 வரை சிவமயம் நாட்டிய நாடகம் – ஸ்ரீதேவி நிருத்யாலயா குழுவினர்.

நள்ளிரவு 1.00 மணி முதல் 2.00 வரை சர்வம் சிவமயம் தியானம் சொற்பொழிவு – வாரியார் சுவாமிகளின் மாணவி தேச மங்கையர்க்கரசி

நள்ளிரவு 2.00 மணி முதல் 4.00 வரை பக்தி பாடல்கள்

அதிகாலை 4மணி முதல் 6.00 மணிவரை கிராமிய பக்தி இசை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !