யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் ஆராதனை விழா
ADDED :1431 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், 21வது ஆராதனை விழா நடைபெற்றது. விழாவில் நிறைவு நாளில், மகன்யாசம் சிறப்பு பூஜை நடந்தது. யோகி ராம்சுரத்குமார் சன்னதிக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.