ராமேஸ்வரம் கோயில் வீதியில் நெரிசல் : சுவாமி, அம்மன் உலா தாமதம்
ADDED :1357 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சுவாமி, அம்மன் வீதிஉலா தாமதமானது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிப்., 21 முதல் மார்ச் 3 வரை மாசி மகாசிவராத்திரி விழா நடக்கிறது. இவ்விழாவின் போது தினமும் காலையில் சுவாமி, அம்மன் கோயில் ரதவீதியில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி 7ம் நாள் விழாவான நேற்று சுவாமி, அம்மன் தங்க கேடயத்தில் எழுந்தருளி ரதவீதியில் உலா வந்தனர். அப்போது போக்குவரத்து போலீசார் அலட்சியத்தால் கிழக்கு ரதவீதியில் வாகனங்களை ஒழுங்குபடுத்தாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுவாமி, அம்மன் உலா ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, பின் தாமதமாக கோயிலுக்கு வந்தது. சுவாமி, அம்மன் வீதி உலா நிகழ்வு முன்கூட்டியே தெரிந்தும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாரின் அலட்சியத்திற்கு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.