உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் கோவில் உற்சவ திருவிழா

மாசாணியம்மன் கோவில் உற்சவ திருவிழா

அன்னூர்: குன்னியூர் கைகாட்டியில், மாசாணியம்மன் உற்சவ திருவிழா இன்று துவங்குகிறது.

குன்னியூர் கைகாட்டியில், பழமையான கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் மாசாணியம்மன் சன்னதி உள்ளது. இங்கே உற்சவ திருவிழா நேற்று இரவு கம்பம் நடுதலுடன் துவங்கியது. பக்தர்கள் மாலை அணிந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு 7:00 மணிக்கு, மாசாணி அம்மனுக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, அன்னதானம் நடக்கிறது. வருகிற 2ம் தேதி காலை 9:00 மணிக்கு, பால் அபிஷேகமும், காலை 10:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது. காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. காலை 11:00 மணிக்கு, மாலை அணிந்து, பக்தர்கள் தீர்த்தக்குடம், பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில் சாமி அழைத்தல் மற்றும் அலங்கார பூஜை நடக்கிறது. இரவு மறு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி கலாமணிசாமி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !