அங்காளம்மன் கோவில் குண்டம் கொடியேற்றத்துடன் துவக்கம்
பல்லடம்: பல்லடம் அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
பல்லடம், கோவை- திருச்சி ரோட்டில், ஸ்ரீஅங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், பல்வேறு குலம், மற்றும் கிராம மக்களுக்கு குல தெய்வமாக உள்ளது. ஆண்டுதோறும் மாசிமாதம் கோவிலில் குண்டம் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நூறாறுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். நடப்பு ஆண்டு, 47வது குண்டம் திருவிழா நேற்று துவங்கியது. முன்னதாக, நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தி உள்ளிட்டவை நடந்தன. நேற்று காலை, 7.00 மணிக்கு கொடியேற்றத்துடன் வினோத் துவங்கியது. தொடர்ந்து, யாகசாலை பூஜை, முகப்பள்ளம் மயான பூஜை உள்ளிட்டவை நடந்தன. இன்று மாவிளக்கு, அக்னிகுண்டம் வளர்த்தல் ஆகியவற்றை தொடர்ந்து, இரவு, 8.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்க உள்ளது. நாளை காலை 7.00 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்வும், இதை அடுத்து பொங்கல் வைத்து வழிபாடும் நடக்கிறது. நாளை மறுநாள் மஞ்சள் நீராடல், அம்மன் திருவீதி உலாவுடன் விழா நிறைவு பெறும்.