உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி கோவில் தேர் வடம்பிடித்து நிலைபெயர்த்தல்

வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி கோவில் தேர் வடம்பிடித்து நிலைபெயர்த்தல்

வெள்ளகோவில்: வெள்ளகோவில் வீரக்குமார்சாமி கோவில் 139 ம் ஆண்டு மாசி மகா சிவராத்திரி திருவிழா நேற்று வடம் பிடித்து நிலை பெயர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக வெள்ளகோவில் சோளீஸ்வரசுவாமி கோவிலிலிருந்து மரியாதை செலுத்தும் வகையில் கோவில் குலத்தவர்களால் இன்ஸ்பெக்டர் ரமா தேவியை கோவிலுக்கு அழைத்து வந்தனர். வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் செயல் அலுவலர் ராமநாதன், நற்பணி மன்ற தலைவர் பாலசுப்ரமணியம், வெள்ளகோவில் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் முத்துக்குமார் அ.தி.மு.க., நகர செயலாளர் டீலக்ஸ் மணி உட்பட கோவில் குலத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் வடம் அரோகரா கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !