உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளியம்மன் கோயில் திருவிழா நிறைவு தெப்பத்தில் நீராடிய பக்தர்கள்

மாகாளியம்மன் கோயில் திருவிழா நிறைவு தெப்பத்தில் நீராடிய பக்தர்கள்

கோத்தகிரி: கோத்தகிரி திம்பட்டி எட்டூர் மக்கள் சார்பில் நடந்த மாகாளி அம்மன் திருவிழா, நேற்று நிறைவடைந்தது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி திம்பட்டி எட்டூர் மக்கள் சார்பில், அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 21 ம் தேதி துவங்கியது. கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மன், கப்பட்டி, கம்பட்டி, அணையட்டி, கடக்கோடு, ஜக்கலோடை உட்பட, எட்டு கிராமங்களுக்கு ஊர்வலமாக சென்றது. அந்தந்த கிராமங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பஜனை ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் இறுதி நாளான நேற்று மாலை, ஆடல் பாடலுடன் அம்மன் மீண்டும் திம்பட்டி கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, சிறுவர்கள் முதற்கொண்டு முதியோர் வரை, விழாவில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள், கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் குதித்து, நீராடி மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !