பூச்சியூரில் சிவராத்திரி விழா : ஆணிக்கால் செருப்பணிந்து வந்த கோவில் பூசாரி
ADDED :1352 days ago
பெ.நா.பாளையம்: பூச்சியூரில் நடந்த சிவராத்திரி விழாவில் கோவில் பூசாரி ஆணிக்கால் செருப்புடன் நடந்து வந்தார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பூச்சியூர் உள்ளது. இங்குள்ள மகாலட்சுமி கோவில், வேட்டைக்கார சாமி கோயில், வீரபத்திர சாமி கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். நேற்று நடந்த விழா ஊர்வலத்தில் மகாலட்சுமி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, வேட்டைக்கார சாமி ஊர்வலம் நடந்தது. இதில், கோயில் பூசாரி ஆணி கால் செருப்பு அணிந்து நடந்து வந்தார். நிகழ்ச்சியில், பக்தர்கள் பரவசத்துடன் இறைவனை வழிபட்டனர். தொடர்ந்து நடந்த வீரபத்திரசாமி, தொட்டம்மாள் ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.