திருப்புல்லாணி சக்கர தீர்த்தத்தில் மகா ஆரத்தி விழா
ADDED :1307 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் முன்புறம் உள்ள சக்கரதீர்த்த குளத்தில் மூன்றாம் ஆண்டு மகாதீப ஆரத்தி விழா நடந்தது. மாலை 4 மணி அளவில் பக்தர்களால் கோயில் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. 6 மணி அளவில் சங்கல்ப பூஜைகளும், 6:30 மணியளவில் தெப்பக்குளத்திற்கு 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க அலங்கார தீபாராதனைகள் சக்கர தீர்த்த தெப்பக்குளத்திற்கு காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பஜனை, நாமாவளி, நாமசங்கீர்த்தனம் உள்ளிட்டவைகளை பாடினர். பெண்கள் நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தலைமையில், தர்ம ரக்சண ஸமிதி, ஆன்மீக அமைப்புகள், சேதுசமுத்திர ஆரத்தி குழுவினர் செய்திருந்தனர்.